சொல் பொருள்
பங்கு – கையிருப்பு தவசம் முதலியவற்றைப் பிரித்தல்.
பாகம் – வீடு மனை நிலபுலம் முதலியவற்றைப் பிரித்தல்.
சொல் பொருள் விளக்கம்
சொத்து நிலை பொருள் என்றும் அலை பொருள் என்றும் இருவகையாம். பங்கு, அலை பொருள் பற்றியது; பாகம், நிலை பொருள் பற்றியது. இவை தாவரசங்கமம்’ என்று வடமொழியிலும், அசையாப் பொருள், அசையும் பொருள் என்று தமிழிலும் வழங்கப்படும். பிள்ளைகளுக்குத் தந்தை பங்குபாகம் வைத்துத் தருவது வழக்கம்.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்