Skip to content

பச்சை பசப்பு

சொல் பொருள்

பச்சை – வளமை அல்லது பசுமை
பசப்பு – ஏய்ப்பு, அல்லது ஒப்பிதம்.

சொல் பொருள் விளக்கம்

பச்சைபசப்புக் காரன் என்று ஏய்ப்பவரைக் குறிப்பர். தம் பசுமையைக் காட்டி ஏய்ப்பாரும், இல்லாததும் பொல்லாததும் சொல்லி ஏய்ப்பாரும் என அவர் இருவகையர். அவர் தன்மையை இவ்விணைச் சொல்லால் சுட்டினாராம். பசப்புதல் – ஏய்த்தல் என்னும் பொருளில் இன்றும் வழங்குகின்றது. பச்சை இப்பொழுது பசையாக வழங்குகின்றது. பசையானவன் என்றால் வளமானவன் என்பதாம்.

குறிப்பு:

இது ஒரு இணைச்சொல்.

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *