சொல் பொருள்
(வி.எ) 1. மறைந்துபோனால், 2. சாய்ந்தால், 3. நுழைந்தால்,
சொல் பொருள் விளக்கம்
1. மறைந்துபோனால்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
if set, if fell down, if (you) enter
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சுடர் நோக்கி மலர்ந்து ஆங்கே படின் கூம்பும் மலர் போல் – கலி 78/15 ஞாயிற்றைப் பார்த்து மலர்ந்து, அது மறைந்தபின் கூம்பிப்போகும் மலரைப் போல் கிடந்து உயிர் மறுகுவது ஆயினும் இடம் படின் வீழ் களிறு மிசையா புலியினும் சிறந்த – அகம் 29/2,3 (படுத்துக்)கிடந்து உயிர் வருந்தினாலும், (தான் தாக்கி) இடப்பக்கம் சாய்ந்தால் விழுந்த களிறை உண்ணாத புலியைக் காட்டிலும் சிறந்த, செழும் பல் யாணர் சிறுகுடி படினே இரும் பேர் ஒக்கலொடு பதம் மிக பெறுகுவிர் – மலை 156,157 வளப்பம் மிக்க பல்வித புதுவருவாயையுடைய சிறிய ஊரில் தங்கினால், (அலைச்சலால்)கறுத்துப்போன பெரிய சுற்றத்துடன் பக்குவமாக வேகவைத்த அவ்வுணவை நிறையப் பெறுவீர்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்