சொல் பொருள்
நிலத்தில் தட்டுத் தட்டாகப் படிந்துள்ள இடங்கள் படுகையாகும்
சொல் பொருள் விளக்கம்
நிலத்தில் தட்டுத் தட்டாகப் படிந்துள்ள இடங்கள் படுகையாகும். படிப்படியாகப் படிவதே படிகை. படுகை என மக்கள் வழக்கில் ஆயது. படுக்கை, படுத்தல் என்பவையும் படிதல் வழிப்பட்ட சொற்களே. தெற்குப் படுகை, வடக்குப் படுகை என நிலப்பகுதிகள் குறிக்கப்படல் உண்டு. மணற்கல் படுகைகள் நெல்லைக் கடற்பகுதிகளில் உண்டு.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்