சொல் பொருள்
படையல் போடல் – தெய்வப் படையல், உழையாத் தீனி
சொல் பொருள் விளக்கம்
படைத்துவைப்பது படையல் ஆகும். சோறு கறி பண்டம் ஆகியவற்றைத் தெய்வப் படையலாகப்படைப்பது வழக்கம். அது ‘படைப்பு’ என்றும் ‘படைப்புப்போடல்’ என்றும் இறந்தவர் நினைவு நிகழ்வில் இடம் பெறும். இத்தெய்வப் படையலும், இறந்தார் படைப்பும் விரும்பாமல் போடும் சோற்றுக்கும் குறியாக வந்தது. உழையாமல் இருந்து வெட்டிச் சோறு தின்பார்க்கு, “உனக்குப் படையல் போட்டிருக்கிறது; போ” என்று இகழ்வாகச் சொல்லி உண்ணச் செய்தலைக் காணலுண்டு. இதுகால் நூல்களை நினைவுப் படையலாக்குவது வழக்கில் உள்ளது.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்