சொல் பொருள்
பட்டிக்காடு – நாகரிகம் இல்லாமை
சொல் பொருள் விளக்கம்
நகரத்திலிருந்து நாகரிகம் வந்தது என்பது மேலைநாட்டு முறை. ‘சிற்றிசன்’ என்னும் ஆங்கிலச் சொல்லும் ‘சிற்றி’ என்னும் நகரில் இருந்து வந்ததே. ஆனால் பழங்காலத் தமிழ் நாகரிகம், புறப்பொருள் வளர்ச்சி கருதாமல் அகவுணர்வு கருதியே வழங்கப் பெற்றதாம். படித்தவர்களும், செல்வச் செழிப்பானவர்களும், ஆளும் பொறுப்பாளர்களும் நகரத்தில் வாழ்ந்ததாலும் அல்லும் பகலும் உழைப்பவரும் நிலத்தை நம்பி வாழ்பவர்களும் பட்டிகளில் வாழ்ந்தமையாலும், அவர்களுக்குக் கல்வி என்பது கைக்கு எட்டாப்பொருளாகப் படித்தவர்களும், பதவியாளர்களும் மேட்டுக் குடியினரும் செய்துவிட்டமையாலும் பட்டிக்காடு என்பது நாகரிகம் இல்லாமைப் பொருள் தருவதாயிற்று.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்