சொல் பொருள்
பட்டை கட்டல் – இழிவுபடுத்துதல்
சொல் பொருள் விளக்கம்
பட்டை என்பது மட்டையின் திரிபு, பனைமட்டை, தென்னைமட்டை என்பனவற்றையும், மடல் என்பனவற்றையும் நினைக. பதனீர் பட்டையில் குடித்தல் வழக்கு. பனை ஓலையை விரித்து மடித்துக் குடையாக்கிக் குடித்தல் நடைமுறை – முன்னாளில். இந்நாளில் கூடக் காட்டுவேலை செய்வார் பனையின் பட்டையில் கஞ்சி குடித்தல் உண்டு. பனங்குடையில் (பட்டையில்) ஊனூண் வழங்கிய செய்தி புறப்பாடல்களில் உண்டு. பதனீர் குடித்துப் போடப்பட்ட பட்டையை எடுத்துக் கழுதை வாலில் கட்டி வெருட்டல். சிறு பிள்ளையர் விளையாட்டு, அதன் வழியே பட்டைகட்டல் இழிவுப் பொருளுக்கு ஆளாயிற்று.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்