சொல் பொருள்
(பெ) 1. ஏழு சுரமும் உள்ள இசை, 2. இசை, 3. பண்ணுதல், இறுக்கமான கட்டு
சொல் பொருள் விளக்கம்
1. ஏழு சுரமும் உள்ள இசை,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Primary melody-type, Melody-type, tight fittings (of a cart)
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மண் அமை முழவின் பண் அமை சீறியாழ் ஒள் நுதல் விறலியர் பாணி தூங்க – பொரு 109,110 மார்ச்சனை அமைந்த முழவினோடே பண் (நன்கு)அமைந்த சிறிய யாழையுடைய ஒளிவிடும் நெற்றியையுடைய விறலியர் தாளத்திற்கேற்ப ஆட, திரு மழை தலைஇய இருள் நிற விசும்பின் விண் அதிர் இமிழ் இசை கடுப்ப பண் அமைத்து திண் வார் விசித்த முழவொடு – மலை 1-3 கருக்கொண்ட மேகங்கள் ஒன்றுகூடிய கருமை நிறங்கொண்ட பரந்த வானில் விண்ணகமே அதிரும்படி முழங்கும் ஓசையைப் போன்று, தாளங்களைத் தட்டிப்பார்த்து, உறுதியான வாரால் இறுகக் கட்டிய மத்தளத்துடன் உவர் விளை உப்பின் குன்று போல் குப்பை மலை உய்த்து பகரும் நிலையா வாழ்க்கை கணம்_கொள் உமணர் உயங்கு_வயின் ஒழித்த பண் அழி பழம் பார் வெண்_குருகு ஈனும் – நற் 138/1-4 உவர் நிலத்தில் விளையும் குன்றுகளைப் போன்ற உப்புக்குவியல்களை மலைநாட்டில் சென்று விற்கும், ஓரிடத்தில் தங்காத நிலையற்ற வாழ்க்கை வாழும் கூட்டமான உமணர்கள் தங்கள் வண்டிகள் முறிந்த இடத்தில் விட்டுச்சென்ற தம் பண்ணுதல் அழிந்தனவாய் உள்ள பழைய பார் எனும் மரக்கட்டையில் வெண்குருகு முட்டையிடும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்