சொல் பொருள்
பண்டத்தை உள்வைத்து வெயில் மழையால் கேடு வராமல் பல திங்களுக்குக் காப்பதற்கு அமைப்பது பண்டடையாகும்
சொல் பொருள் விளக்கம்
பண்டத்தை உள்வைத்து வெயில் மழையால் கேடு வராமல் பல திங்களுக்குக் காப்பதற்கு அமைப்பது பண்டடையாகும். எ-டு : வெங்காயப் பண்டடை. பறித்தவுடன் விற்றால் விலை, வேண்டுமளவு கிட்டாது என்பதால் இருப்பு வைத்து விலை கூடும்போது விற்பது உழவர் வழக்கம். அதற்குப் பண்டடை போடுதல் நெல்லை, முகவை வழக்கு. ‘பண்டக சாலை’ மூலம் அது.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்