சொல் பொருள்
(பெ) 1. முன்னம், முன்பு, முற்காலம், 2. பழங்காலம்
சொல் பொருள் விளக்கம்
1. முன்னம், முன்பு, முற்காலம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
former time, previous time, ancient times
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பண்டு அறியாதீர் போல் படர்கிற்பீர்-மன்-கொலோ – கலி 39/39 முன்னமே ஒருவரையொருவர் பார்த்தறியாதவர் போல் நடந்துகொள்வீர்களோ? உண் கடன் வழிமொழிந்து இரக்கும்_கால் முகனும் தாம் கொண்டது கொடுக்கும்_கால் முகனும் வேறு ஆகுதல் பண்டும் இ உலகத்து இயற்கை – கலி 22/1-3 உண்பதற்குரிய பொருளைப் கடனாகப் பெறப் பணிந்து பேசி, இரந்து கேட்கும்போது இருக்கும் முகமும், தாம் வாங்கிக் கொண்டதைத் திருப்பிக் கொடுக்கும்போது இருக்கும் முகமும் வேறுபடுதல் பண்டைக் காலத்திலும் இந்த உலகத்துக்கு இயற்கை,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்