Skip to content

சொல் பொருள்

பதவல் என்பது மிகுதிப் பொருள் பெற்றது.

பதவல் – கூட்டம்

சொல் பொருள் விளக்கம்

பதவல் என்பது நிரம்ப என்னும் பொருளது. பதம் என்பது நீர்ப்பதம். பதத்துப் போயிருத்தல் என்பது நீர் கோத்து நிற்பதாம். அது எடையாலும் அளவாலும் அளவில் மிகுதியாக இருக்கும். பச்சை மிளகாய்க்கும் வற்றலுக்கும் உள்ள வேறுபாட்டை அறியும் போது புலப்படும். பதத்தது மிகுதியாதல் கொண்டு பதவல் என்பது மிகுதிப் பொருள் பெற்றது. இது நெல்லை வழக்கு. மக்கட் பெருக்கமும் பதவல் எனப்படும்.

பதம் என்பது பக்குவம், ஈரம், பருவம் எனப் பல பொருள் தரும் சொல். ‘பதவலாக இருக்கிறது’ எனின் இன்னும் உலரப் போடவேண்டும் என்பர். ஆனால் இவற்றையன்றிக் கூட்டம் என்னும் பொருளிலும் பதவல் வழங்குகின்றது. ‘எறும்புப் பதவல்’ ‘ஈப் பதவல்’ என்பனவற்றுடன் ‘பிள்ளை குட்டிப் பதவல்’ என்பதும் வழக்காம். பதவல் என்பது கூட்டப் பொருளதாம். “குழந்தைப் பதவல் படுத்துகிற பாடு இவ்வளவு, அவ்வளவா?” என்னும் சலிப்பு பெரியவர்கள் வாக்கில் பெருக வழங்கும்.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *