பதாகை என்பதன் பொருள்பெருங்கொடி
1. சொல் பொருள்
(பெ) பெருங்கொடி
2. சொல் பொருள் விளக்கம்
படாகை என்றும் அழைக்கப்படும் பதாகை ஓர் அரசனின் அதிகாரத்தின் அடையாளமாகக் கருதப்படும் கொடியைக் குறிக்கும் சொல்லாகும். விளம்பரத்திலும் பதாகை பயன்படுத்தப்படுவதுண்டு.
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
large flag, ensign, protest/marketing banner, placard, standard.
4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
பலர் புகு மனை பலி புதவின் நறவு நொடை கொடியொடு பிறபிறவும் நனி விரைஇ பல் வேறு உருவின் பதாகை நீழல் – பட் 179-182 (கள்ளுண்போர்)பலரும் செல்லும் மனைகளில் (தெய்வத்திற்குக் கொடுக்கும்)பலிகளுக்கான வாசலில் கள் விற்பனைக்காகக் கட்டிய கொடியுடன், ஏனையவற்றிற்குக் கட்டின கொடிகளும் மிகவும் கலந்துகிடப்பதால், பலவாய் வேறுபட்ட வடிவினையுடைய பெருங்கொடிகளின் நிழலில் பல் வேறு குழூஉ கொடி பதாகை நிலைஇ - மது 373 பல் வேறு உருவின் பதாகை நீழல் - பட் 182 வல கை பதாகை கோட்டொடு சேர்த்தி - சிலப்.புகார் 8/27
5. பயன்பாடு
என் பதாகை தாங்கிய உன் முகம்
காங்கயம் தொகுதி அதிமுக வேட்பாளர் 13,483 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாகப் பதாகை: புகைப்படத்தால் சர்ச்சை
அம்பேத்கர் பதாகை கிழிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல்
வீச்சரிவாளுடன் வாழ்த்து பதாகை… ராணுவ வீரர் மீது வழக்குப் பதிவு!
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்