சொல் பொருள்
(பெ) பார்க்க : பத்தல்
1. தொட்டி, பள்ளம்
சொல் பொருள் விளக்கம்
பார்க்க : பத்தல்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: 1. தொட்டி, பள்ளம் பய நிரைக்கு எடுத்த மணி நீர் பத்தர் புன் தலை மட பிடி கன்றோடு ஆர – நற் 92/6,7 பயன்தரும் ஆநிரைகளுக்காக எடுத்து வைத்த தெளிந்த நீருள்ள தொட்டியில் புல்லிய தலையையுடைய இளைய பெண்யானை தன் கன்றுடன் வேட்கைதீர 2. குடுவை, யாழின் குடம் யாழ் பத்தர் புறம் கடுப்ப – புறம் 136/1 யாழின் குடத்தின் வெளிப் பக்கத்தைப் போல
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்