சொல் பொருள்
(பெ) பலராமன்,
சொல் பொருள் விளக்கம்
பலராமன்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Balaraman
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: புதை இருள் உடுக்கை பொலம் பனைக்கொடியோற்கு முதியை என்போர்க்கு முதுமை தோன்றலும் – பரி 2/22,23 எதனையும் மறைக்கும் இருள் நிற ஆடையை உடைய, பொன்னாலான பனைக்கொடியானாகிய பலதேவனுக்கு முற்பட்டவன் ஆவாய் என்போர்க்கு முதியவனாக இருப்பதுவும், கடல் வளர் புரி வளைபுரையும் மேனி அடல் வெம் நாஞ்சில் பனைக்கொடியோனும் – புறம் 56/3,4 கடற்கண்ணே வளரும் புரிந்த சங்கைஒத்த திரு நிறத்தையுடைய கொலையை விரும்பும் கலப்பையையும் பனைக்கொடியை உடையோனும் பால் நிற உருவின் பனைக்கொடியோனும் நீல் நிற உருவின் நேமியோனும் என்று – புறம் 58/14,15 பால்போலும் நிறத்தையுடைய பனைக்கொடியை உடையோனும் நீல நிறம் போலும் திருமேனியைக் கொண்ட ஆழியை உடையோனும் என்று
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்