சொல் பொருள்
பம்பை – செறிந்து நீண்டு தொங்கும் முடி.
பரட்டை – உலர்ந்து அகன்று நிமிர்ந்த முடி
சொல் பொருள் விளக்கம்
பம்பை பரட்டை என்பது குழந்தைகள் விளையாட்டுப் பாடலின் முதலடி. பம்பைத் தலை பரட்டைத்தலை என்பது வழக்காறு. கொட்டு அடிப்பவர் தலைமயிர் அவர்கள் அசைவுக்கு ஏற்ப அழகாக இயங்கிக் காட்சி இன்பம் தரும். பம்பைக் கொட்டு என்பது ஒன்று. பல கொட்டுகள் சேர்ந்து முழங்குவது பம்பை. இங்கும் முடிச்செறிவு கருதிய பெயர் அது. வறண்டு காய்ந்த மரங்கள் பரட்டை எனப்படும். அம்மரங்கள் போல்வது பரட்டையாம்.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்