Skip to content

சொல் பொருள்

(பெ) பயன், நன்மை, பலன்

சொல் பொருள் விளக்கம்

பயன், நன்மை, பலன்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

profit, gain, advantage

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

மலையவும் கடலவும் மாண் பயம் தரூஉம்
அரும் பொருள் அருத்தும் திருந்து தொடை நோன் தாள் – பெரும் 67,68

மலையில் உள்ளனவும், கடலில் உள்ளனவும்(ஆன) சிறந்த பயனைக் கொடுக்கும்
அரிய பொருளை (எல்லாரும்)நுகரச்செய்யும் திருத்தமான தம் வினையில் வலிய முயற்சியினையும்;

கயம் புக்கு அன்ன பயம் படு தண் நிழல் – மலை 47

குளத்தில் மூழ்கியதைப் போன்ற பயனைத் தருகின்ற குளிர்ந்த நிழலில்,

மழையினும் பெரும் பயம் பொழிதி அதனால் – பதி 64/18

மழையைக் காட்டிலும் பெரிதான நன்மையினைப் பொழிகிறாய், அதனால்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *