பொருள்
- உயர்ந்த பட்டாடையைத் தலையைச் சூழத் தொங்கலுடன் கட்டுதல் பரிவட்டம் எனப்படும்
- பரிசுத்தம்
- திருக்கோயில்களில் ‘பரிவட்டம்’ கட்டுதல் இன்றும் காணும் பெருவழக்கு
- முந்தை மன்னர்கள் காலத்தில் அலுவல் அடையாளமாக அரசன் வழங்கிய சின்னமாகவும் பரிவட்டம் திகழ்ந்துள்ளது
- இழப்புக் கடனாக மொட்டையடிப் பவர்க்குப் பரிவட்டம் கட்டுதல் பெருவழக்காக இன்றும் உள்ளது
விளக்கம்
பரிவட்டம், பரிவேடம் என்பதையும் குறிக்கும். பரிவேடம் காண்க. ‘பரிசுத்தம்’ என்பது பரிவட்டமாதலை வெள்ளி விழாப் பேரகராதி சுட்டும். திருக்கோயில்களில் ‘பரிவட்டம்’ கட்டுதல் இன்றும் காணும் பெருவழக்கு. உயர்ந்த பட்டாடையைத் தலையைச் சூழத் தொங்கலுடன் கட்டுதல் பரிவட்டம் எனப்படும். கோயில் வரவேற்பு மங்கல நிகழ்வாகப் பெருய தக்கார்க்குச் செய்வதாய் அமைகின்றது. முந்தை மன்னர்கள் காலத்தில் அலுவல் அடையாளமாக அரசன் வழங்கிய சின்னமாகவும் பரிவட்டம் திகழ்ந்துள்ளது. இழப்புக் கடனாக மொட்டையடிப் பவர்க்குப் பரிவட்டம் கட்டுதல் பெருவழக்காக இன்றும் உள்ளது.
வேட்டி துண்டு கட்டுதல் என்பது அந்நிகழ்வுக்குப் பெயர். உறவினர் (சம்பந்திகள்) செய்வது அது. உற்றார் (பங்காளிகள்) செய்தல் விலக்குடையது.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்