பொருள்
- பரிவாரம் சூழ்வோரைக் குறிக்கும்
- திருக்கோயில் திருத்தொண்டு மேற்கொண்டவர்களுக்கும் பரிவாரப் பெயர் வழக்கில் உண்டு
- குறுநில மன்னர்களுக்குப் பரிவாரம் என்னும் பெயருண்டு
- உறை
விளக்கம்
“பரியாளம் என்பது பரிவார மாகும்” என்பது திவாகரமும் (மக்கட்) பிங்கலமும் (845), பரிவாரம் சூழ்வோரைக் குறிக்கும். ‘பரிசனர்’ என்றதும் இது. படைஞர் ஏவலர் என்பாரையும் குறிக்கும் (சதுரகராதி).
திருக்கோயில் திருத்தொண்டு மேற்கொண்டவர்களுக்கும் பரிவாரப் பெயர் வழக்கில் உண்டு.
கோவை, திருச்சி, மதுரை மாவட்டத் தொட்டியக் குறுநில மன்னர்களுக்குப் பரிவாரம் என்னும் பெயருண்டு என்பதைச் செ.ப.க. அகராதி சுட்டும். பரிவாரம், ‘உறை’ என்னும் பொருள தென்பது யாழ்ப்பாண அகராதி.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்
பரிசுத்த வேதககமம், ஆதியாகமம் 32:10-ல் சொல்லப்பட்டுள்ள இரு பரிவாரங்கள் என்பது எதைக் குறிக்கிறது? என்பதற்கான விளக்கம் 32:7ல் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. கர்த்தர் தனக்கு தந்த ஆசிர்வாதங்களை இரு பிரிவுகளாக பிரித்து, அதில் ஒரு பகுதியை ஏசாவுக்கும் மற்றொரு பகுதியை தனக்கும் வைத்துக் கொண்டான். அதைதான் “இவ்விரண்டு பரிவாரங்கள்” என குறிக்கப்பட்ட பட்டுள்ளது,