பொருள்
- கதிரையும் திங்களையும் சுற்றியமைந்துள்ள ஒளிவட்டம் ஊர்கோள் அல்லது பரிவேடமாம் அது.
- அறிவார்ந்த பெருமக்கள் தலையைச் சுற்றி வரையப்படும் வட்டம் இப்பரிவேட்டத்துடன் எண்ணத்தக்கதாம்
- உள்ளொளி மாட்சியை விளக்கும் புறவொளிக் காட்சி அஃதென்க.
விளக்கம்
‘ஊர்கோள்’, ‘வட்டம்’ என்பதுவும் இதன் பெயர். கதிரையும் திங்களையும் சுற்றியமைந்துள்ள ஒளிவட்டம் ஊர்கோள் அல்லது பரிவேடமாம். திங்களைச் சுற்றிய வட்டம் ‘கோட்டை’ எனவும் வழங்கும். எட்டக்கோட்டை யிட்டால் கிட்ட மழை; கிட்டக் கோட்டையிட்டால் எட்ட மழை” என்பது பழமொழி. அறிவார்ந்த பெருமக்கள் தலையைச் சுற்றி வரையப்படும் வட்டம் இப்பரிவேட்டத்துடன் எண்ணத்தக்கதாம். உள்ளொளி மாட்சியை விளக்கும் புறவொளிக் காட்சி அஃதென்க.
“பரிவேட மிட்டது கொல் பார்” என்று கண்ணன் அசுவத்தாமனுக்குக் காட்டலைக் காட்டுகிறது பாரத வெண்பா.