பொருள்
- பருத்தது
- மலைக்குப் ‘பருப்பம்’ என்னும் பெயரும் ‘பருப்பதம்’ என்னும் பெயரும் உண்டாயின
விளக்கம்
பருப்பம் – பருத்தது; பருப்பு + அம் = பருப்பம். அம் பெருமைப் பொருள் ஒட்டு; எ-டு; கூடு+அம்=கூடம்.
பருத்த உயிரி யானை; அவ்வியானை ‘நடக்கும் மலை’ எனப்படும். அவ்வியானையின் முகபடாமும், அம்பாரியும் ‘பருமம்’ எனப்பட்டால், அவற்றைக் கொண்ட யானையும் அவ்வியானையொடு ஒருபுடை ஒப்பாகச் சொல்லப்படும் நடவாமலையும் ‘பருப்பம்’ எனப்படுவது தகவுதானே. அவ் வகையால் மலைக்குப் ‘பருப்பம்’ என்னும் பெயரும் ‘பருப்பதம்’ என்னும் பெயரும் உண்டாயின. பர்வதம் என்பது வடசொல்; பருப்பம் தென்சொல்.
“நீலப்பருப்பம்” என்பது பெருங்கதை (5-1:181)
பருப்பதமலை என்னுமொரு மலையையும் காட்டும் பெருங்கதை (5.3 : 55).
‘மலையமலை’ என்பது போல ஒரு பொதுச் சிறப்புப் பெயர் இணையாம். பதம் என்பது திரண்டது, பருமைíம் பருவமும் அமையதது என்னும் பொருளதாதலும் அறிக. அறியின் ‘பருப்பதம்’ என்னும் தென்சொல் நிலை தெளிவாம். ‘பதம்’ திரட்டப்பட்டதாதல் வெண்ணெய்க்கொரு பெயரதாதலால் கண்டு கொள்க.