Skip to content

சொல் பொருள்

(பெ) துன்பம்

சொல் பொருள் விளக்கம்

பொறுக்க முடியாத் துயர்

இடுக்கண்
பழங்கண்
புன்கண்
துன்பம்
துயர்
இன்னல்
அல்லல்

எஞ்சிய துயரச் சொற்களிலும் விஞ்சிய துயரை விளக்குவது பருவரல் என்பதை அதன் பருமையே காட்டும் – இரா. இளங்குமரன்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

suffering, affliction

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

பருவரல் எவ்வம் களை மாயோய் என - முல்லைப்பாட்டு 21
துன்பத்தைத் தரும் வருத்தத்தைக் களைவாய், மாமைநிறத்தவளே என்று

பொறையின்று பெருகிய பருவரற் கண்ணும் -  தொல்காப்பியம் 1097

பசப்புறு பருவரல் - திருக்குறள், காமத்துப்பால், அதிகாரம் 119

கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே
ஒண்ணுதல் செய்தது கண்டு - குறள் எண்:1240

பருவரலும் பைதலும் காணான்கொல் காமன்
ஒருவர்கண் நின்றொழுகு வான் - குறள் எண்:1197


பருவரல் – எவ்வாற்றானும் பொறுக்கமுடியாத துன்பம் 
எவ்வம் – எதனினும் தீராத வருத்தம்.

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *