Skip to content

சொல் பொருள்

(பெ) பரு, பருமை,

சொல் பொருள் விளக்கம்

பருமைப் பொருளதாதல், பருத்த, பெரிய

சொல்வளம்:

பரூஉச்சுடர், பரூஉச்செவி, பரூஉத்தொடி, பரூஉக்கண், பரூஉக்கரை, பரூஉக்காழ், பரூஉக்குடர், பரூஉக்குரல்,பரூஉக்கை
பரூஉத்தாள், பரூஉத்திரி, பரூஉப்பகடு, பரூஉப்பணை, பரூஉப்பெயல்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

thickness, rotundity

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

பரூஉ என்பதனை மனக்காட்சியாய்க் காணப் பல்வேறு எடுத்துக்காட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன.

வெரூஉ பறை நுவலும் பரூஉ பெரும் தட கை – பொரு 171

வெருட்டும் பறைகள் (போன்று)முழங்கும், பருத்த பெரிய வளைவினையுடைய கையினையும்,

எழூஉ புணர்ந்து அன்ன பரூஉ கை நோன் பார் – பெரும் 48

(இரண்டு)கணைய மரங்களையும் சேர்த்தாற் போன்ற பருத்த கைகளையுடைய, வலிய, கோக்கும் சட்டத்தையும்,

பாவை_விளக்கில் பரூஉ சுடர் அழல – முல் 85

பாவை (ஏந்திநின்ற)தகளியில் பரிய தீக்கொழுந்து நின்றெரிய,

பரூஉ திரி கொளீஇய குரூஉ தலை நிமிர் எரி – நெடு 103

பருத்த திரிகளைக் கொளுத்தி, (செந்)நிறமான தழல் மேல்நோக்கி எரிகின்ற சுடரை,

பரூஉ காழ் ஆரம் சொரிந்த முத்தமொடு – மது 681

பரிய வடமாகிய ஆரம் சொரிந்த முத்தோடு,

பரூஉ குறை பொழிந்த நெய்க்கண் வேவையொடு – மலை 168

பெரிய பெரிய தசைகள் மிகுதியாகப்போட்ட நெய்யின்கண் வெந்த பொரியலுடன்,

பரூஉ கொடி வலந்த மதலை பற்றி – மலை 216

பருத்த கொடிகள் பின்னியவற்றை ஆதரவாகப் பிடித்துக்கொண்டு,

பரூஉ பளிங்கு உதிர்த்த பல உறு திரு மணி – மலை 516

பருமனான பளிங்குக்கல்லை (உடைத்து)உதிர்த்துவிட்டதைப்போன்ற பலவித அழகிய மணிகளும்,

எய்ம் முள் அன்ன பரூஉ மயிர் எருத்தின் – நற் 98/1

முள்ளம்பன்றியின் முள்ளைப்போன்ற பருத்த மயிருள்ள பிடரியைக் கொண்ட,

பரூஉ பகடு உதிர்த்த மென் செந்நெல்லின் – பதி 71/4

பெருத்த எருதுகள் போரடிக்குபோது மிதித்து உதிர்த்த மென்மையான செந்நெல்லின்

பதி எதிர் சென்று பரூஉ கரை நண்ணி – பரி 10/26

ஊரார் அனைவரும் ஆற்றுக்கு எதிரே சென்று, ஆற்றின் பெரிய கரைகளை அடைந்து,

பசு நனை நறு வீ பரூஉ பரல் உறைப்ப – அகம் 107/20

புதிய தேனையுடைய நறிய பூக்கள் பெரிய பாறைக்கற்களில் உதிர்ந்து கிடக்க

பரூஉ உறை பல் துளி சிதறி வான் நவின்று – அகம் 218/4

பரிய பலவாகிய மழைத்துளிகளைச் சிதறி

பால் கடை நுரையின் பரூஉ மிதப்பு அன்ன – அகம் 224/6

பால் கடையும்போது எழும் வெண்ணெயின் பெரிய உருண்டையான மிதப்பினை ஒத்த

பள்ளி யானை பரூஉபுறம் தைவரும் – அகம் 302/3

துயில் கொள்ளும் யானையின் பரிய உடம்பினைத் தடவும்

இருள் திணிந்து அன்ன குரூஉ திரள் பரூஉ புகை – புறம் 228/2

இருள் ஓரிடத்தே செறிந்து நின்றாற் போன்ற நிறமுடைத்தாய் திரண்ட பருமைமிக்க புகை

தொடி மாண் உலக்கை பரூஉ குற்று அரிசி – புறம் 399/2

பூணிட்டு மாட்சியுறுவித்த பருத்த உலக்கையால் குற்றப்பட்ட அரிசி

பசி பிணிக்கு இறைஞ்சிய பரூஉ பெரும் ததரல்
ஒழியின் உண்டு வழு இல் நெஞ்சின்

குறுந்தொகை: 213

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *