சொல் பொருள்
பல்லாடல் – உண்ணல்
சொல் பொருள் விளக்கம்
“விடிந்ததில் இருந்து இந்நேரம் வரை பல்லாடவே இல்லை” எனின் உண்ணவில்லை என்பது பொருளாம். ‘பல்லாடுதல்’ ஆகிய பல்லசைவு பல் மருத்துவரைத் தேடுதற்குரியது. இப்பல்லாடுதல் உணவு தேடி உண்பதற்குரியது. உண்ணுதற்கு ‘அசை போடுதல்’ என்பதொரு பெயர். அசைத்தல் என்பதும் உண்ணுதலே. பல்லை அசைக்க மெல்ல – வகையின்றி இருப்பது உண்ணா வறுமையை உரைப்பதாம். “பல்லில் பச்சைத் தண்ணீர் படவில்லை” என்பதும் அத்தகையதொரு வழக்கே.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்