சொல் பொருள்
பளிச்சிடல் – புகழ் பெறல்
சொல் பொருள் விளக்கம்
பள பளப்பு பளிச்சு என்பன ஒளிப் பொருள். பளிச்சிடும் ஒன்று கவர்ச்சி மிக்கதாகவும் மதிக்கத் தக்கதாகவும் அமைகின்றது. அவ்வகையால் பளிச்சிடலுக்குப் ‘புகழ்’ என்னும் பொருள் உண்டாயிற்று. “அவர்கள் அப்பா பெயரைச் சொன்னால் பளிச்சென்று யாருக்கும் தெரியும்” என்பதில் பளிச்சிற்குப் புகழ் பொருள் உண்மை விளங்கும். இனிப்பளிச்சிடல் இல்லாப் புகழை இருப்பதாகக் காட்டுவதாக அல்லது போலிப்புகழாக அமைவதும் உண்டு. அது வெளிச்சம் போடல் எனப்படும். வெளிச்சம் காட்டுவதில் பெரிய ஆள் அவன்” என்பது அவ்வெளிச்சப் போலியை விளக்கும்.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்