சொல் பொருள்
பழக்கம் – ஒருவர் பல்கால் செய்து வருவது பழக்கம்.
வழக்கம் – பலரும் பலகாலம் கடைப்பிடியாகக் கொண்டது வழக்கம்.
சொல் பொருள் விளக்கம்
வழக்கம் என்பது மரபு ஆகும். அது வழிவழி வழங்கி வருவதாம். தனிப்படப்பழகி, கடைப் பிடியாக அமைந்துவிட்டது பழக்கமாம். “ சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப் பழக்கம்”என்பதொரு பாடல்.
பழக்க வழக்க வேறுபாட்டுணர்வு இன்மையால் “பழக்கம் கொடிது பாறையினும் கோழிகிண்டும்.” என்னும் பழமொழி வந்தது. பழகப்பழகப் பாலும் புளிக்கும் என்பது பழக்கமே. கோழி கிண்டல் வழக்கமே.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்