Skip to content

சொல் பொருள்

(பெ) 1. பக்கம், 2. கவர்ந்துகொள்ளுதல், 3. பகுதி, உறுப்பு, 4. தாய் முலையிலிருந்து சுரக்கும் வெண்மையான திரவம்,

சொல் பொருள் விளக்கம்

1. பக்கம்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

side, seizing, part, milk

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

இரு மருப்பு எருமை ஈன்றணி காரான்
உழவன் யாத்த குழவியின் அகலாது
பாஅல் பைம் பயிர் ஆரும் ஊரன் – குறு 181/3-5

பெரிய கொம்பினையுடைய எருமையாகிய அண்மையில் ஈன்ற கரிய பெண்ணெருமை
உழவனால் கட்டப்பட்டுள்ள தன் கன்றைவிட்டு அகலாமல்
பக்கத்தேயுள்ள பசிய பயிர்களை மேயும் ஊரையுடைய நம் தலைவனின்

முழா இமிழ் துணங்கைக்கு தழூஉ புணை ஆக
சிலைப்பு வல் ஏற்றின் தலைக்கை தந்து நீ
நளிந்தனை வருதல் உடன்றனள் ஆகி
—————————- ———————————-
கொல் புனல் தளிரின் நடுங்குவனள் நின்று நின்
எறியர் ஓக்கிய சிறு செங்குவளை
ஈ என இரப்பவும் ஒல்லாள் நீ எமக்கு
யாரையோ என பெயர்வோள் கையதை
கதுமென உருத்த நோக்கமோடு அது நீ
பாஅல் வல்லாய் ஆயினை பாஅல்
யாங்கு வல்லுநையோ வாழ்க நின் கண்ணி – பதி 52/14-27

முழவு ஒலிக்கும் துணங்கைக் கூத்தில் தழுவியாடுவோருக்குத் துணையாக,
முழங்குகின்ற வலிமையான காளையினைப் போல, முதல்கை கொடுத்து, நீ
பெண்களுடன் நெருக்கமாக நின்று சுற்றிவருவதைக் கண்டு, ஊடல்கொண்டவளாய்,
————————- —————————————
கரையை இடிக்கும் காட்டாற்று வெள்ளத்தில் நடுங்கும் தளிரைப் போல, கோபத்தால் மேனி நடுங்க நின்று, உன்மீது
எறிவதற்காக ஓங்கிய சிறிய செங்குவளை மலரை,
எனக்குத் தா என்று இரு கை நீட்டி வேண்டவும், சினம் குறையாதவளாய், “நீ எமக்கு
இனி யாரோ?” என்று அந்த இடத்தை விட்டு நீங்கிச் செல்பவளின் கையினில் இருந்த குவளை மலரைச்
சட்டென்று வெகுண்ட பார்வையுடன் அதனை நீ
கவர்ந்துகொள்ளுவதற்கு இயலாதவனாய் ஆகிவிட்டாய்; ஆனால் (பகைவர் மதில்களைக்) கவர்ந்துகொள்ள
எவ்வாறு உன்னால் முடிந்தது? வாழ்க! உன் தலைமாலை!

பாஅல் அம் செவி பணை தாள் மா நிரை
மாஅல் யானையொடு மறவர் மயங்கி – கலி 5/1,2

பெரிய உறுப்புக்களாகிய அழகிய செவிகளையும், பருத்த கால்களையும் உடைய விலங்குக் கூட்டமான
மதம்பிடித்து மயங்கித்திரியும் யானைகளோடு, பாலை நில வேட்டுவர்களும் நெருக்கமாகத் திரிதலால்

பாஅல் புளிப்பினும் பகல் இருளினும் – புறம் 2/17

பால் தன் இனிமை ஒழிந்து புளிப்பினும், ஞாயிறு தன் விளக்கம் ஒழிந்து இருளினும்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *