சொல் பொருள்
(பெ) 1. அழகு, 2. இடம், 3. பக்கம், அணிமை, 4. இணக்கம், 5. நலம், நன்மை
சொல் பொருள் விளக்கம்
1. அழகு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
beauty, fairness, place, location, side, neighbourhood, agreeableness, goodness
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பனி துறை பகன்றை பாங்கு உடை தெரியல் – பதி 76/12 குளிர்ந்த நீர்த்துறையில் மலர்ந்துள்ள பகன்றை மலரால் தொடுத்த அழகான மாலையை பல்லியும் பாங்கு ஒத்து இசைத்தன – கலி 11/21 பல்லியும் நல்ல இடத்தில் இருந்து ஒலித்து நல்வாக்குச் சொல்கிறது; பாங்கு அரும் கானத்து ஒளித்தேன் – கலி 115/15 பக்கத்திலுள்ள அழகான பூஞ்சோலைக்குள் ஓடி ஒளிந்துகொண்டேன்” ஆங்க அணி நிலை மாடத்து அணி நின்ற பாங்காம் மட பிடி கண்டு வய கரி மால்_உற்று – பரி 10/41,42 அவ்விடத்தில், அழகிய நீரணிமாடத்தின் அருகாமையில் நின்ற இணக்கமான இளைய பெண்யானையைக் கண்டு, இளங்களிறு ஒன்று மையல்கொண்டு, புனை வினை நல் இல் புள்ளும் பாங்கின – அகம் 141/3 புனையப்பெற்ற தொழில்களையுடைய நல்ல மனையிலே புள் நிமித்தங்கள் நல்லனவாகின்றன.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்