Skip to content

சொல் பொருள்

(பெ) நள்ளிரவு

சொல் பொருள் விளக்கம்

நள்ளிரவு

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

midnight

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

பல்லோர் துஞ்சும் பானாள் கங்குல் – குறு 355/4

பலரும் துயிலும் நள்ளிரவின் இருளில்

மா மேயல் மறப்ப மந்தி கூர
பறவை படிவன வீழ கறவை
கன்று கோள் ஒழிய கடிய வீசிகுன்று குளிர்ப்பு அன்ன கூதிர் பானாள் – நெடு 10-12

விலங்குகள் மேய்தலை மறந்துபோக, குரங்குகள் (குளிரால்)கூனிப்போக
(மரங்களில் தங்கும்)பறவைகள் (உறைந்துபோய் காலின் பிடியை விட்டுக் கீழே)வீழ, கறவை மாடுகள்
(தம்)கன்றை ஏற்றுக்கொள்ளுதலைத் தவிர்க்கக் கடுமையாய் உதைக்க,
மலையையும் குளிர்விப்பது போன்ற கூதிர்க்காலத்தின் (ஒரு)நண்பகலில்
– நெடுநல்வாடையில் இவ்விடத்தில் வரும் ‘பானாள்’ என்பது நண்பகலைக் குறிக்கும் 

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *