சொல் பொருள்
(பெ) 1. உறக்கம், 2. படுக்கை
சொல் பொருள் விளக்கம்
1. உறக்கம்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
sleep, bedding
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கண்ணியன் வில்லன் வரும் என்னை நோக்குபு முன்னத்தின் காட்டுதல் அல்லது தான் உற்ற நோய் உரைக்கல்லான் பெயரும்-மன் பல் நாளும் பாயல் பெறேஎன் – கலி 37/3-6 தலைமாலையினை அணிந்து, ஒரு வில்லுடன் வருவான், என்னை நோக்கி முகக்குறிப்பால் ஏதோ கேட்பதை அன்றி, தான் கொண்டுள்ள காதலை என்னிடம் சொல்லாமல் சென்றுவிடுவான், இவ்வாறு பலநாளும் நடந்தது, அவனை எண்ணி உறக்கம் கொள்ளேன் ஒலி வெள் அருவி ஓங்கு மலை நாடன் மலர்ந்த மார்பின் பாயல் துஞ்சிய வெய்யள் – ஐங் 205/3-5 ஒலிக்கின்ற வெள்ளிய அருவிகளையுடைய உயர்ந்த மலை நாடனின் அகன்ற மார்பையே படுக்கையாகக் கொண்டு தூங்குவதில் நாட்டங்கொண்டுள்ளாள்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்