Skip to content

சொல் பொருள்

(வி) 1. அழிவுறு, கேடுறு, 2. ஒளி மங்கு,

சொல் பொருள் விளக்கம்

1. அழிவுறு, கேடுறு, 

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

be ruined, become dilapidated

lose lustre

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

மலைந்தோர் தேஎம் மன்றம் பாழ்பட
நயந்தோர் தேஎம் நன் பொன் பூப்ப – பெரும் 423,424

(தன்னை)எதிர்ப்போரின் ஊர்களிலுள்ள (மக்கள் கூடும்)பொதுவிடங்கள் கேடுறவும்,
(தன்னிடம்)நயந்துகொண்டவர் நாடுகள் நல்ல பொன் பூத்துத் திகழவும்,

ஆள்பவர் கலக்கு_உற அலைபெற்ற நாடு போல்
பாழ்பட்ட முகத்தோடு பைதல் கொண்டு அமைவாளோ – கலி 5/12,13

நாட்டை ஆள்பவர் அழிவு பல செய்ய, அவரால் அலைக்கழிக்கப்பட்ட நாட்டு மக்கள் போல
ஒளியிழந்த முகத்தோடு பரிதவித்து இருப்பாளோ

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *