சொல் பொருள்
(வி) 1. கையில் பற்று, 2. கையால் ஒரு குறிப்பிட்ட வடிவில் ஒரு பொருளைச் செய், உருவாக்கு,
2. (பெ) 1. ஒரு உள்ளங்கையில் எடுத்து மூடும் அளவு, 2. பெண் யானை, 3. ஒரு பொருளைக் கையால் பற்றிக்கொள்ள உதவும் பகுதி, 4. கையால் பற்றியிருத்தல்
சொல் பொருள் விளக்கம்
1. கையில் பற்று,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
catch, hold, grasp, shape, handful, female elephant, handle, hold, clutch
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பைம் கண் ஊகம் பாம்பு பிடித்து அன்ன – சிறு 221 பசிய கண்களையுடைய கரிய குரங்கு பாம்பு(த் தலையைப்) பற்றினாற் போன்று அயிர் உருப்புற்ற ஆடு அமை விசயம் கவவொடு பிடித்த வகை அமை மோதகம் – மது 625,626 கண்டசருக்கரையை வெப்பமேற்றிச் சமைத்தல் அமைந்த பாகினை(க் கூட்டிய) உள்ளீட்டோடெ கையில் பிடித்துச் செய்த வகுப்பு அமைந்த கொழுக்கட்டைகளையும், கௌவை போகிய கரும் காய் பிடி ஏழ் நெய் கொள ஒழுகின பல் கவர் ஈர் எள் – மலை 105,106 பிஞ்சுத்தன்மை போன(=முற்றிய) கரிய காய்கள் ஒரு கைப்பிடிக்குள் ஏழு காய்களே கொள்ளத்தக்கனவாய் நெய் (உள்ளே)கொண்டிருக்க வளர்ந்தன பலவாகக் கிளைத்த ஈரப்பதமான எள்; இரும் பிடி தட கையின் செறிந்து திரள் குறங்கின் – பொரு 40 பெரிய பெண் யானையின் பெரிய கை போல நெருங்கி ஒன்றித் திரண்ட துடையினையும் இரவு பகல் செய்யும் திண் பிடி ஒள் வாள் – முல் 46 இரவைப் பகலாக்கும், திண்ணிய கைப்பிடியையுடைய ஒளிவிடும் வாளை பிடி அமை நூலொடு பெய்ம் மணி கட்டி – கலி 140/6 கையால் பிடிப்பதற்கான கடிவாளத்துடன், சேர்த்துக்கட்டிய மணிகளைக் கழுத்தில் கட்டி,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்