சொல் பொருள்
பிடித்தம் – பற்றுமை, இறுக்குதல்
சொல் பொருள் விளக்கம்
கையால் பிடிப்பது பிடித்தல். பிடியளவு என்பது கையளவே. களிறு கையால் பிடிக்க வாய்த்த பெண் யானையே பிடியாகிப் பெண்பெயர் ஆகியிது. கையால் பிடிக்கும் பிடிப்பு மனத்தால் பிடிப்பதாகவும் வழக்கில் உள்ளது. அது பிடித்தமாகும். பிடித்தம் என்பது பற்றுமையுடையது. எனக்குப் பிடித்தால் உண்பேன், போவேன் என்பதும், எனக்குப் பிடித்தமானது அது, அவர் என்பதும் பிடித்தப் பற்றுமை காட்டும். இடுப்புப்பிடிப்பு, பிடிப்பான உடை, நீர்ப்பிடிப்பு இடம் என்பவை இறுக்கப் பொருள் தருவன.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்