சொல் பொருள்
பிடித்தாட்டல் – துன்புறுத்தல், சொல்லுக்குக் கட்டுப்பட்டு நடக்க வைத்தல்
சொல் பொருள் விளக்கம்
பிடித்தல் – கையால் பிடித்தல்; குடுமியைப்பிடித்து ஆட்டுதல் என்பது செயலற்றுப் போகவைத்துக் கட்டுப்படச் செய்வதாம். உடுக்கடியில் குடுமியைப் பிடித்து ஆட்டி அலைக்கழிப்பர். பேயோட்டுதல் என்பது அதன் பெயர். ஆதலால் பிடித்தாட்டல் என்பது துன்புறுத்தலுக்கு ஆயது. சிலருக்கு சிறு பிடி கிடைத்து விட்டால் போதும். அதனைக் கொண்டு பெரும்பாடு படுத்தி விடுவர். தம் சொற்படியெல்லாம் நடக்க வைப்பர். “அவன் பிடிகொடுப்பானென்று பார்க்கின்றேன்; எப்படியோ தப்பித்துக் கொள்கிறான்” என்பதில் பிடித்தாட்டல் வேட்கை வெளியாகும்.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்