சொல் பொருள்
(பெ) 1. பின்னர், 2. பின் பக்கம்
சொல் பொருள் விளக்கம்
1. பின்னர்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
afterwards, back side
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பிற்றை அணங்கும் அணங்கும் போலும் – நற் 376/9,10 இதன் பின்னர் முருகவேளும் என்னை வருத்தும் போலும்? உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே – புறம் 183/1,2 தன் ஆசிரியர்க்கு ஓர் ஊறுபாடுற்றவிடத்து அது தீர்தற்கு உதவியும், மிக்க பொருளைக் கொடுத்தும் பின் நின்று கற்கும் நிலையையும் வெறுக்காமல் கற்பது நன்று.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்