சொல் பொருள்
பிள்ளை – ஆண் பிள்ளை
கொள்ளி – கொள்ளிக் கட்டை தீ
சொல் பொருள் விளக்கம்
“பிள்ளை கொள்ளி இல்லை” என்பதொரு வசை. எவருக்கோ ஆண் பிள்ளைப் பேறு இல்லை என்றால், பின்னே வருவதையும் கூட்டி பிள்ளை கொள்ளி இல்லை என்பர். எவனோ கொள்ளி வைக்கத்தானே செய்வான்? இருந்தாலும் அவன் மகன் இல்லையாம்! அதனால் இவ்வாறு பழிப்பர். “கொள்ளிக்குப் பிள்ளை” என்று தவிப்பார் சிலர். அப்பிள்ளை கொள்ளிக் கட்டையாகவோ, கொள்ளிவாய் பேயாகவோ இருந்தாலும் கவலை இல்லை! கொள்ளி முடிவான் எனத் திட்டிக் கொண்டிருக்கத் திரிந்தாலும் கொள்ளி வைக்க அவனொருவன் வேண்டுமாம்!
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்