சொல் பொருள்
(பெ) 1. பெரியோர், சான்றோர், 2. மெய்ப்பொருளுணர்ந்தோர், 3. கற்புடை காதல்மகளிர்,
சொல் பொருள் விளக்கம்
1. பெரியோர், சான்றோர்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
great or eminent persons, men of wisdom, loving women of chastity
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சாந்தில் தொடுத்த தீம் தேன் போல புரைய மன்ற புரையோர் கேண்மை – நற் 1/4,5 சந்தனமரத்தில் சேர்த்துக்கட்டிய இனிய தேன்கூடு போல மேன்மையானது சிறந்தவர்களின் நட்பு செயலை அம் தளிர் ஏய்க்கும் எழில் நலம் அ நலம் பயலையால் உணப்பட்டு பண்டை நீர் ஒழிந்த_கால் பொய் அற்ற கேள்வியால் புரையோரை படர்ந்து நீ மை அற்ற படிவத்தான் மறுத்தரல் ஒல்வதோ – கலி 15/12-15 அசோக மரத்தின் அழகிய தளிரைப் போன்றது இவளின் எழில் நலம், அந்த நலம் பசலை நோயால் பாழடிக்கப்பட்டு அதன் பண்டைய இயல்பு அழிந்தபோது – பொய்யற்ற கேள்வியறிவால் உயர்ந்த மெய்ப்பொருளுணர்ந்தோரைச் சார்ந்து நீ பெறப்பொகும் மாசற்ற நோன்புநெறிகளால் திருப்பித்தர முடியுமா எழு முடி கெழீஇய திரு ஞெமர் அகலத்து புரையோர் உண்கண் துயில் இன் பாயல் பாலும் கொளாலும் வல்லோய் – பதி 16/17-19 எழுவரது மணிமுடியினால் செய்துகொண்ட ஆரத்தை அணிந்த – வெற்றித்திருமகள் நிறைந்த – உன் மார்பினை, உன் காதல் மகளிரின் மையுண்ட கண்கள் உறங்குவதற்கு இனிய படுக்கையாக ஆக, போர்மேற் செல்லும்போது நீங்குவதும், இல்லத்திலிருக்கும்போது கொள்ளுவதும் ஆகிய இரண்டுக்கும் வல்லவனே!
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்