சொல் பொருள்
(பெ) 1. தோற்று ஓடுகை, 2. திரும்பிச்செல்லுதல்
சொல் பொருள் விளக்கம்
1. தோற்று ஓடுகை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
turning the back in the battle field, going back
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஒடுங்கா தெவ்வர் ஊக்கு அற கடைஇ புறக்கொடை எறியார் நின் மற படை கொள்ளுநர் – பதி 31/32,33 அடங்காத பகைவரின் ஊக்கம் கெடும்படியாக விரட்டி அவர் தோற்றோடுகையில் (அவரின் முதுகினில்) வேல்களை வீசியெறியமாட்டார் – உன் வீரம் மிக்க சேனைக்குத் தலைமைகொள்பவர் சிறப்பு செய்து உழையரா புகழ்பு ஏத்தி மற்று அவர் புறக்கொடையே பழி தூற்றும் புல்லியார் தொடர்பு போல் – கலி 25/15,16 சிறப்புகள் பல செய்து அருகிலிருந்து புகழ்ந்து பாராட்டிவிட்டு, அவர் புறத்தே அகன்று செல்லுகையில் பழி தூற்றுகின்ற புன்மையாளர் போல
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்