சொல் பொருள்
(வி) 1. புறமுதுகிடச்செய், தோற்றோடச்செய், 2. பின்னே சென்று காண்
சொல் பொருள் விளக்கம்
1. புறமுதுகிடச்செய், தோற்றோடச்செய்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
put to flight, defeat, go behind and see
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அரி மான் இடித்து அன்ன அம் சிலை வல் வில் புரி நாண் புடையின் புறங்காண்டல் அல்லால் – கலி 15/1,2 சிங்கம் முழங்குவதைப் போன்று முழங்கும், அழகிய சிலைமரத்தால் செய்யப்பட்ட வலிய வில்லின் முறுக்குடைய நாணைச் சுண்டிவிட்டு ஒலியெழுப்பினாலே பகைவர் தோற்றோடக் காண்பது அன்றி, செழும் தண் மனையோடு எம் இவண் ஒழிய செல் பெரும் காளை பொய்ம்மருண்டு சேய் நாட்டு சுவை காய் நெல்லி போக்கு அரும் பொங்கர் வீழ் கடை திரள் காய் ஒருங்கு உடன் தின்று வீ சுனை சிறு நீர் குடியினள் கழிந்த குவளை உண்கண் என் மகள் ஓர் அன்ன செய் போழ் வெட்டிய பெய்தல் ஆயம் மாலை விரி நிலவில் பெயர்பு புறங்காண்டற்கு மா இரும் தாழி கவிப்ப தா இன்று கழிக என் கொள்ளா கூற்றே – நற் 271/3-12 செழுமையும் குளிர்ச்சியும் உள்ள வீட்டோடு நான் இங்கே தனித்திருக்க, தன்னுடன் வருகின்ற பெரிய காளைபோன்றவனின் பொய்மொழிகளில் மயங்கி, தொலை நாட்டு, சுவையுள்ள காயைக்கொண்ட நெல்லியின், வழிச்செல்வோரைப் போகவிடாமல் தடுக்கும் தோப்பில் விழுந்துகிடக்கின்ற முற்றிலும் திரண்ட காய்களை இருவரும் சேர்ந்து தின்று, வற்றியுள்ள சுனையிலுள்ள சிறிதளவு நீரைக் குடித்துவிட்டுக் கடந்து சென்ற குவளை மலர்போன்ற மையுண்ட கண்களையுடைய என் மகளை, ஒன்றுபோலிருக்கும் சிவந்த பனங்குருத்தைக் கீண்டு பதனிடுமாறு போடுதலாய மாலைக் காலத்து விரிந்த நிலவில் சென்று பின்னே போய்க் காணும்படியாக விட்ட இதற்கு முன்னாலேயே பெரிய கரிய தாழியிலிட்டுக் கவித்து மூடும்படி வலிமையற்று இறந்தொழிக என் உயிரை எடுத்துக்கொள்ளாத கூற்றம்.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்