சொல் பொருள்
(பெ) காணாவிடத்து பிறர்மேல் பழிதூற்றுகை
சொல் பொருள் விளக்கம்
காணாவிடத்து பிறர்மேல் பழிதூற்றுகை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Slander, backbiting
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மறம் திருந்தார் என்னாய் நீ மலை இடை வந்த_கால் அறம் சாரான் மூப்பே போல் அழி_தக்காள் வைகறை திறம் சேர்ந்தான் ஆக்கம் போல் திரு தகும் அ திரு புறங்கூற்று தீர்ப்பது ஓர் பொருள் உண்டேல் உரைத்தை காண் – கலி 38/18-21 வழியில் கொள்ளையர்கள் கொடுஞ்செயலினின்றும் மாறவில்லை என்று கருதாமல், நீ மலைவெளியில் வந்தபோது அறநெறியைக் கைவிட்டவன் முதுமையில் சீரழிவது போல், மனம் அழிந்துபோய்க் கிடந்தவள், விடியற்காலையில் நல்லொழுக்கமுடையவனின் செல்வம் போல் நாளும் சீர்பெற்றுச் சிறப்புறுவாள், அந்தச் சீரினால் அயலார் கூறும் இழிப்புரைகளை மாற்றத்தக்க ஒரு வழி இருந்தால் அதை உரைப்பாயாக,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்