சொல் பொருள்
(பெ) 1. கோபித்துக்கொள்ளுதல், சினந்துபேசுதல், 2. வெறுத்தல்,
சொல் பொருள் விளக்கம்
1. கோபித்துக்கொள்ளுதல், சினந்துபேசுதல்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
being indignant, disliking
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: புல்லேன் மகிழ்ந புலத்தலும் இல்லேன் – நற் 340/1 தழுவமாட்டேன், தலைவனே! உன்னைக் கோபித்துக்கொள்ளுதலும் இல்லை; நும்_வயின் புலத்தல் செல்லேம் எம்_வயின் பசந்தன்று கண்டிசின் நுதலே – அகம் 376/12,13 (சேரிப்பரத்தை நின்னைக் கவர்ந்துசென்றாளாக) நும்பால் யாம்வெறுத்தல் இல்லேம், எம்மிடத்து நுதல் பசலையுற்றது காண்பாயாக
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்