சொல் பொருள்
(வி) கோபித்துக்கொள்கிறாய்
சொல் பொருள் விளக்கம்
கோபித்துக்கொள்கிறாய்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
(you) get angry
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஊடல் யாங்கு வந்தன்று என யாழ நின் கோடு ஏந்து புருவமொடு குவவு நுதல் நீவி நறும் கதுப்பு உளரிய நன்னர் அமையத்து வறும் கை காட்டிய வாய் அல் கனவின் ஏற்று ஏக்கற்ற உலமரல் போற்றாய் ஆகலின் புலத்தியால் எம்மே – அகம் 39/20-25 (உனக்கு)ஊடல் எங்ஙனம் வந்தது?’ என்று உன் பக்கம் உயர்ந்த புருவங்களுடன் திரண்டு குறுகிய நெற்றியை நீவிவிட்டு, மணமுள்ள பக்கக் கூந்தலைக் கோதிவிட்ட நல்ல நேரத்தில் வெறுங்கையாய் ஆக்கிய அந்தப் பொய்க் கனவினின்றும் கண்விழித்து உள்ளம் நலிவடைந்த துயரத்தை ஏற்றுக்கொள்ளாததினால் கோபித்துக்கொள்கிறாய் என்னை.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்