சொல் பொருள்
(பெ) 1. புலவு, புலால் நாற்றம், 2. இறைச்சி, மீன், 3. தொண்டைத் தசை,
சொல் பொருள் விளக்கம்
1. புலவு, புலால் நாற்றம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
smell of flesh or fish, flesh, fish, throat flesh
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கொடும் திமில் பரதவர் வேட்டம் வாய்த்து என இரும் புலா கமழும் சிறுகுடி பாக்கத்து – அகம் 70/2 வளைந்த படகினையுடைய பரதவர் மீன் வேட்டை நன்கு கைகூடிற்றாக பெரிய அளவில் புலால் நாற்றம் வீசும் சிறிய குடிகளையுடைய கடற்கரையூரில் இரும் புலா அருந்தும் நின் கிளையொடு சிறிது இருந்து கரும் கால் வெண்_குருகு எனவ கேள்-மதி – நற் 54/3,4 மிக்க புலவைத் தின்னும் உன் கிளையுடன் சற்றுத் தாமதித்து, கரிய காலைக் கொண்ட வெண்ணிறக் குருகே! நான் சொல்வதைக் கேட்பாயாக! வெருகின் இருள் பகை வெரீஇய நாகு இளம் பேடை உயிர் நடுக்குற்று புலா விட்டு அரற்ற – புறம் 326/1-3 காட்டுப்பூனையாகிய இருளில் வந்து வருத்தும் பகைக்கு அஞ்சிய மிக்க இளமைபொருந்திய பெட்டைக்கோழி உயிர்ப்பும் நடுக்கமும்கொண்டு தொண்டைத்தசையைத் திறந்து கூவி
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்