புலிகடிமால் என்பவன் இருங்கோவேள் குடியின் முதல்வன்.
1. சொல் பொருள்
(பெ) ஒரு சங்ககாலச் சிற்றரசன்
2. சொல் பொருள் விளக்கம்
ஒரு சங்ககாலச் சிற்றரசன்
புலிகடிமால் பதினெண்குடி வேளிருள் ஒருவன்
இருங்கோவேள், தமிழகத்தின் வடபகுதியாகிய எருமை (மைசூர்) நாட்டைச் சேர்ந்த துவரை யென்னும் நகர்க்கண்ணிருந்து ஆட்சி புரிந்த வேந்தர் வழியினன். இத்துவரை துவார சமுத்திரம் எனப்படுகிறது. இருங்கோவேள் அவ் வேளிருள் நாற்பத்தொன்பதாவது தலைமுறையினன். புலி கடிமால், இருங்கோவேள் குடியின் முதல்வன். இவ் வேளிர் வள்ளன்மை சிறந்தவர்; போர்வன்மை மிக்கவர். இவர் நாடு புதுக்கோட்டைச் சீமையிலுள்ளமலைநாடு. இவற்றிற்கு மேற்கிலுள்ள கோடைமலைத்தொடர் பொன்படுமால் வரையென (Imp. Gazette Coimbatore) ஆராய்ச்சியாளர் கூறியுள்ளனர்.
மைசூர் நாட்டுத் துவரை பன்னிரண்டாம் நூற் றாண்டின் தொடக்கத்திலேயே உண்டாகிய நகரம். இத்துவரையிற் றோன்றி மேம்பட்ட ஹொய்சள வேந்தரோடு புலிகடிமாலாகிய இருங்கோவேளை இணைத்துக் கண்டு, புலிகடிமால் என்றது ஹொய்சள என்ற தொடரின் தமிழ்ப் பெயராகக் கருதுவதுமுண்டு.
In one of my recent papers I have drawn attention to the title ‘Pulikadimal’ in Dravidian which means tiger killing hero, which fits in as a good description of the Indus seals with this motif. – Iravatham Mahadevan
பன்னிரண்டாம்நூற்றாண்டில் மைசூர் நாட்டில் இருந்து ஆட்சி செலுத்திய ஹொய்சள வேந்தருடைய கல்வெட்டுக்களுள், பண்டை நாளில் யதுகுலத்தில் தோன்றிய சளவென்ற பெயரினனான வேந்த னொருவன் சஃகிய மலைகளிடையே மேலை வரைத் தொடர் (Western Ghats). வேட்டை புரியுங்கால் முயலொன்று புலியொடு பொருவது கண்டு வியப்புற்று இந்நிலம் மிக்க வன்மை நல்கும் பெருநிலம் போலும் என எண்ணியவனாய் அவற்றைத் தொடர்ந்து சென்றானாக, அங்கே தவம் புரிந்து வந்த முனிவ னொருவன் புலியைக் கண்டு, “சளனே, போய்ப் புலியைக்கொல்க” (அதம் ஹொய்சள) என வேந்தனைப் பணித்தலும், அவன் உடை வாளையுருவிப் புலியைக் கொன்றான்; முனிவன் அருள் பெற்று மீண்ட சளவேந்தன் அதுமுதல் ஹொய்சளன் எனப்பட்டான்; அவன் வழிவந்தோர் தம்மை ஹொய்சளர் எனக் கூறிக்கொள்வாராயினர் என மைசூர்நாட்டுப் பேலூர் மாவட்டத்துப் பேலவாடியில் உள்ள நரசிம்ம ஹொய்சள தேவர் கல்வெட்டொன்று (Ep. Car. Vol.I. B1:171) கூறுகிறது.
அந்நாட்டு ஹொன்னாவரத்துக் கேசவப் பெருமாள் கோயில் கல்வெட்டு (Ibid: Hn. 65). இவ்வரலாற்றிற் கண்ட முயலைப்பற்றிய செய்தியை நீக்கி எஞ்சியவற்றைக் கூறுகிறது. காட்டிலிருந்த முனிவன் மந்திர வலிமையுடையனென்று சளன் என்பான் அறிந்து அவன் திருவடியில் வீழ்ந்து வணங்கினனென்றும், அதனால் மகிழ்ச்சியுற்று, அவனுக்குச் சசகபுரத்தைத் தலைமையாகக் கொண்ட பேரரசை வழங்க வேண்டுமென விரும்பிய முனிவன் அதற்கேற்ற மந்திரச் செயல்களைச் செய்தானென்றும் அதனை அழித்தல் வேண்டிச் சசகபுரநகரத் தெய்வமாகிய வாசந்திகை யென்பாள் ஒரு புலியுருக் கொண்டு வந்தாளென்றும், அது கண்டு முனிவன் அப் புலியைக் கொல்லுமாறு பணிப்பான் “ஹொய்சள” என்றானென்றும், அவன் அவ்வண்ணமே செய்து ஹொய்சள வேந்தனானானென்றும்(Ibid. Ak. 71)
அரிசிற் கரையில் உள்ள வீரவல்லாள தேவன் கல்வெட்டொன்று கூறுகிறது. இப் புறப்பாட்டில் முனிவனென்றும், துவரை யென்றும் புலிகடிமால் என்றும் வருவனவற்றைக் கொண்டு, இந்த ஹொய் சளக் கதை ஈண்டு நினைக்கப்படுகிறது.
மற்று, மேற்கு மலைத் தொடர்ப்பகுதியினர் நாற்புறமும் மலைமுடிகள் சூழ்ந்த இடை. நிலத்தைத் தடவென்றும் கோட்டமென்றும் கூறுதலால், முனிவன் தடவென்றது, முனிவ னொருவன் இருந்த மலைமிசை யிடைநில மென்றும், அந்நிலத்து வாழ்ந்த வேளிர் தலைவனொருவன், அப் பகுதிக்குக் கிழக்கில் உள்ள புலிநாடென்றும் பன்நாடென்றும் வழங்கிய கன்னட நாட்டு வேந்தனை வென்றது பற்றிப் புலிகடிமால் எனப்பட்டான் என்றும் கொள்வது நேரிதாகத் தோன்றுகிறது.
அந்நாளில் அப் பகுதியை யாண்ட ஆந்திர சாதவாகன வேந்தருள் புலிமாய் என்பான் சிறந்து விளங்கினமையின் ஒருகால் அவனை வென்றது பற்றி இருங்கோவேள் புலிகடிமால் எனப்படுவானாயினன் என்றும் கொள்ளலாம். மேனாட்டு யவனரான தாலமியும் இப் புலிமாய் வேந்தனைக் குறித்துரைத் துள்ளார்; சாதவாகனாட்சி கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலிருந்தே தொடர்ந்திருக்கிறது; அந்நாளிலேயே துவராவதி (துவரை) நகரம் அந் நாட்டில் இருந்திருக்கிறது. ஸ்ரீ புலுமாவி, புலிமாயி எனக் காணப் படினும் கன்னட மொழியில் அது புலிமெய் என வழங்கும் என்றும், புலிபோலும் மெய்வலியுடையனென்பது பொருளென்றும் ஆராய்ச்சி யாளர் கூறுகின்றனர். வ்வாற்றால் ஹொய்சளக் கதை யினும் இது பொருத்தமாதல் காணப்படும். இப் புலிகடிமால் வழிவந்த இருங் கோவேளிர்களுட் பலர் புதுக்கோட்டைப் பகுதியில் வாழ்ந் திருந்தனரென அப்பகுதியிலுள்ள கல்வெட்டுக்கள் காட்டுகின்றன. கொடும்பாளூரிலிருந்து வாழ்ந்த வேளிரும் இருங்கோ வேளிரே; பிற்காலத்தே அவர்கள் இருக்குவேளிர் எனத் தம்மைக் கூறிக் கொள்வாராயினர் இவ் வேளிர்கள் வேளகத்தி (bailgum). லிருந்து கங்கநாடு கொங்குநாடுகளின் வழியாகத் தென்னாடடைந்தவர். இனி, வேளிர்கள் முதற்கண் வாழ்ந்த மலைநாடு பொன்வளம் படைத்தவை யாதலின் “பொன்படு
மால்வரைக் கிழவ” என்றாரென்றுமாம்.
Tamil literature Purananooru states a king by the name Pulikadimal belonging to the Velir group who is actually from the empire of Dwaraka and their lineage had ruled the parts of Mysore sector too. Besides the history of the kings of Kongku kings there are also other books which explains the Hoysalas and the Yadhavars are the same. The art and architecture of the Hoysalas are very unique and known through out the world. A pillar that could rotate about its centre of axis and a pillar that stands on its own by the centre of gravity on a star shaped platform are some of the scientific achievements of Hoysalas.
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
a chieftain of sangam period, Pulikadimal which means the Tiger-slayer, Pulikadimal, was a contemporary of Karikala Chola and Kapilar. (Hoysala), Harappa
4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
ஒலியல் கண்ணி புலிகடிமாஅல்
யான் தர இவரை கொண்-மதி – புறம் 201/15,16
தழைத்த கண்ணியையுடைய புலிகடிமாலே!
யான் நினக்குத் தர இவரை (பாரி மகளிரை)க் கொள்வாயாக.
ஒலியல் கண்ணி புலிகடிமாஅல் 10
நும் போல் அறிவின் நுமருள் ஒருவன் – புறம் 202
தழைத்த தலைமாலையையுடைய புலிகடிமாலே!
உம்மைப் போல் அறிவுடைய உம்மவன் ஒருவன்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்