சொல் பொருள்
புள்ளிவைத்தல் – நிறுத்துதல், குறைப்படுத்தல்
சொல் பொருள் விளக்கம்
நிறுத்தக் குறிகளில் ஒன்று முற்றுப்புள்ளி. வினை முற்றின் அடையாளமாவது முற்றுப்புள்ளி. இவன் புள்ளி வைத்தல் என்பது முற்றுப்புள்ளி வைத்தலைக் குறித்தது. அதன் பொருள் நிறுத்துதல் அல்லது தடை என்பதாம். குற்றம் செய்தவர்க்குக் கரும்புள்ளி செம்புள்ளி குத்துதலும் கழுதை மேல் ஏற்றி ஊர்வலம் செய்யவைத்தலும் முன்னாள் வழுக்கு. அவ்வழக்கில் இருந்து புள்ளிவைத்தல், புள்ளிகுத்தல் என்பவை குற்றப்படுத்துதல் என்னும் பொருளில் வழங்குவதாயிற்று.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்