சொல் பொருள்
(பெ) 1. துளை, 2. சாளரம், 3. சிறு வாயில், திட்டிவாயில், 4. ஒடுக்கமான வழி, 5. வாயில்
சொல் பொருள் விளக்கம்
1. துளை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
hole, window, wicket gate, narrow path, gate, entrance
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஏழ் புழை ஐம் புழை யாழ் இசை கேழ்த்த அன்ன இனம் வீழ் தும்பி வண்டொடு மிஞிறு ஆர்ப்ப – பரி 8/22,23 ஏழு துளை, ஐந்து துளை ஆகியவற்றைக் கொண்ட குழல்கள், யாழ் ஆகியவற்றின் இசைக்கு ஒப்பானதைப் போன்று, தம் இனத்தை விரும்புகின்ற தும்பியும், வண்டும், மிஞிறும் ஆரவாரிக்க, சில்_காற்று இசைக்கும் பல் புழை நல் இல் – மது 358 சில்லென வீசும் காற்று ஒலிக்கும் பல சாளரங்களையுடைய நல்ல இல்லங்களையும் வாயிலொடு புழை அமைத்து ஞாயில்தொறும் புதை நிறீஇ – பட் 287,288 பெரிய வாயில்களுடன் சிறு வாசல்களையும் உண்டாக்கி, கோட்டை முகப்புத்தோறும் (மறைந்தெறியும்)அம்புக்கட்டுக்களைக் கட்டிவைத்து, ஆள் இயங்கு அரும் புழை ஒற்றி வாள் வரி கடுங்கண் வய புலி ஒடுங்கும் நாடன் – நற் 322/6,7 ஆட்கள் நடமாடும் அரிய ஒடுக்கமான வழியில் மறைந்திருந்து ஒளிபொருந்திய வரிகளையும் கடுமையான கண்களையும் உடைய வலிமை மிக்க புலி ஒடுங்கியிருக்கும் நாடனாகிய தலைவனின் புலர் குரல் ஏனல் புழை உடை ஒரு சிறை – அகம் 82/13 முதிர்ந்த கதிரினையுடைய தினைப்புனத்தின் வாயிலின் ஒரு பக்கத்தே
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்