சொல் பொருள்
பூசி மெழுகல் – மறைத்தல்
சொல் பொருள் விளக்கம்
தளத்தில் வெடிப்பு ஏற்படுமானால் பூசி மெழுகுவது வழக்கம், அடுப்பு முன்னாளில் மண்ணால் செய்யப்படுவதே வழக்கமாக இருந்தது. சுடு மண் அடுப்பை வைத்து அதனைப் பூசி மெழுகுவர். அம்மெழுகுதல் வெள்ளி செவ்வாய் என இரு நாள்களிலும் செய்வர். பூசி மெழுகுவதால் அடுப்பில் ஏற்பட்டிருக்கும் விரிசல், வெடிப்பு, கீறல் ஆயவை மறைந்துபோம். அவ்வழக்கில் இருந்து குற்றம் குறை கேடு ஆயவற்றைப் புலப்படா வண்ணம் மறைத்தல் பூசி மெழுகுதலாக வழங்கலாயிற்று. “அவன் பூசி மெழுகுவதில் தேர்ந்த ஆள்” என்பதில் அவன் மறைப்புத்திறம் மறைவின்றி விளங்கும்.
இது ஒரு வழக்குச் சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்