சொல் பொருள்
(பெ) தருக்கு, செருக்கு
சொல் பொருள் விளக்கம்
தருக்கு, செருக்கு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
pride, arrogance
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அச்சொடு தாக்கி பார் உற்று இயங்கிய பண்ட சாகாட்டு ஆழ்ச்சி சொலிய அரி மணல் ஞெமர கல் பக நடக்கும் பெருமித பகட்டுக்கு துறையும் உண்டோ – புறம் 90/6-9 பாரத்து மிகுதியால் அச்சுமரட்தோடு பார் வந்து தாக்கி உற இருத்தலின் நிலத்தின்கண் குழிவான பண்டத்தையுடைய சகடத்தினது ஆழ்ச்சியைப் போக்குவதற்கு புனல் கொழிக்கப்பட்ட மணல் பரக்கவும் கற்கள் பிளக்கவும் நடக்கவல்ல மிக்க மனச்செருக்கினையுடைய காளைகளுக்குப் போதற்கரிய துறையும் உண்டோ?
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்