சொல் பொருள்
பேசமறத்தல் – சாதல்
சொல் பொருள் விளக்கம்
பேசமறுத்தல், உடன்படாமைப் பொருட்டது. பேச மறத்தல் என்பது ஒரு மங்கல வழக்குப் போல இறப்பைச் சுட்டுவதும் உண்டு. விளையாட்டு வழக்காகவும் கூட வழங்குகின்றது எனலாம். “அவர் பேச மறந்து போனார்.” என இறந்தவரைக் குறிப்பர். “மூச்சுவிட மறந்து விட்டார்” வாயைப் பிளந்து விட்டார்.” “கண்ணை மூடி விட்டார்” “வானத்தை நோக்கி விட்டார்” “மூச்சை அடக்கி விட்டார்” “ஒடுங்கி விட்டார்” “அடங்கி விட்டார்” என்பனவெல்லாம் இப்பொருளவே.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்