சொல் பொருள்
(வி) வழிபடு,
சொல் பொருள் விளக்கம்
வழிபடு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
worship
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கடவுள் ஓங்கு வரை பேண்-மார் வேட்டு எழுந்து – நற் 165/4 தெய்வம் உறையும் உயர்ந்த மலையை வழிபடும்பொருட்டு, பலிகொடுத்து எழுந்து வில் ஏர் வாழ்க்கை விழு தொடை மறவர் வல் ஆண் பதுக்கை கடவுள் பேண்-மார் நடுகல் பீலி சூட்டி துடிப்படுத்து தோப்பி கள்ளொடு துரூஉ பலி கொடுக்கும் – அகம் 35/6-9 வில்லையே ஏராகக் கொண்ட வாழ்க்கையை உடைய, சிறப்பாக அம்பு எய்யும் மறவர்கள் தம் வலிய ஆண்மையின் சின்னமான பதுக்கைக் கடவுளை வழிபடுவதற்கு அந்த நடுகல்லில் மயில்தோகைகளை அணிவித்து, உடுக்கு அடித்து, நெல்லால் ஆக்கிய கள்ளோடு செம்மறியாட்டையும் பலி கொடுக்கும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்