சொல் பொருள்
பேத்து(பெயர்த்தல்) – ஓரிடத்தில் இருந்து ஒன்றைப் பெயர்த்தல்.
மாத்து(மாற்றுதல்) – பெயர்த்ததை வேறோரிடத்தில் கொண்டு போய் நட்டுதல்.
சொல் பொருள் விளக்கம்
பெயர்த்து மாற்றுதல் உழவுத் தொழில் சார்ந்தது. அதன் வழியாக வந்தது ‘பேத்துமாத்தாம்’.
ஒருவகையாக நிகழும் நிகழ்வை வேறொன்றாக மாற்றி, மற்றோரிடத்துச் சொல்வது ‘பேத்து மாத்து’ எனப்படுகிறது. மாற்றிப் பேசுவதைப் பேத்துதல் என்பர். அது பிதற்றுதலாம். பெயர்த்தல் பிதற்றுதல் என்பன ஒப்பானவையே. மாற்று என்பது மாத்து என வழங்குதல் வெளிப்படை.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்